மன்னார் நிருபர்
(23-10-2023)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு பல்வேறு துறைசார் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் நியமனங்களை அடுத்து மிகவும் வினைத்திறனாக இயங்கி வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள கேள்வி யை ஐ ஈடு செய்யும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்கு புதிய சத்திரசிகிச்சை மேசை உலகவங்கியின் முதனிலை சுகாதார சேவை நிறுவனங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிடத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டு நிறுவப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.