வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. லியோ திரைப்படத்தின் பணிகளின் போதே இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதான அறிவிப்பு வெளியானது. லியோ வெளியான பின் விஜய் 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தின் பூஜைக் காட்சிகளை படக்குழு வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து தயாரிப்பு நிறுவனம் தற்போது பத்திரிக்கைச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.