சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகள் மற்றும்பொறிமுறைகளுக்கான உலகளாவிய இயக்கமொன்றைநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது
அண்மைய காலங்களில் உலகின் வெவ்வேறான பகுதிகளில்அதிகரித்து வரும் வன்முறை முரண்பாடுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் நீதியுடன் சமாதானத்துக்கான உலகளாவியஇயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்முன்னெடுக்கவுள்ளது..
முழு உலகிற்கும் கற்பனை செய்து பார்க்க முடியாதபின்விளைவுகளுடன் இஸ்ரேலிய-பலஸ்தீன முரண்பாடானதுமத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவும் ஆபத்துக்காரணமாக சமாதானத்துக்கும் நீதிக்குமான இவ்வாறானஉலகளாவிய முயற்சி மிகவும் அவசியமாக இன்றுதேவைப்படுகிறது.
தனித்து வன்முறைக்குப் பதிலாக சட்டம்/பேச்சுவார்த்தை/இராஜதந்திரம் மூலம் முரண்பாடுகளை தீர்ப்பதற்கானபுதியதொரு பொறிமுறை மற்றும் புதிய நெறிமுறைகளுக்குஉலகளாவிய ரீதியிலானதொரு இயக்கமே காலத்தின்கட்டாயமாகவுள்ளது.
உலகளாவிய அமைதியும் உலகளாவிய நீதியும் ஒன்றுடன்ஒன்று நெருக்கமாக இணைந்திருப்பதால், உலகளாவியஅமைதிக்கான செயற்பாடுடன் உலகளாவிய நீதிக்கானசெயற்பாடுகள் ஒரே சமயத்தில்
முன்னெடுக்கப்படவேண்டும். பல்வேறுபட்ட தவறுகள் மற்றும்அநீதிகளை அமைதியான முறையில் மற்றும் சட்டத்தால்முறையாக அணுகாமை காரணமாகவே பெரும்பாலும் வன்முறைதலைதூக்குகிறது.
அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காகஉருவாக்கப்பட்ட, அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகளின்பாதுகாப்புச் சபையானது, அண்மைய காலத்தில்அவதானிக்கப்பட்ட உக்ரேன் மற்றும் தற்போதைய இஸ்ரேலியமற்றும் பலஸ்தீன முரண்பாடுகளின்போது பாதுகாப்புச் சபையின்நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ அதிகார துர்பிரயோகத்தால்செயலிழந்து போயுள்ளது.
பொறுப்புக்கூறலுக்கான உலகளாவியரீதியில் இருக்கின்றஒரேயொரு சர்வதேச குற்றப் பொறிமுறையான சர்வதேசகுற்றவியல் நீதிமன்றம் கூட இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது போலுள்ளது. உதாரணமாக, மியான்மாரின்றோகிஞ்சாக்களின் (Rohingyas) நாடுகடத்தல் தொடர்பாக தனதுநியாயாதிக்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பயன்படுத்தியது. ஆனால், சீனாவின் உய்குர்களின் (Uyghurs) நாடுகடத்தல் தொடர்பாக தனது நியாயாதிக்கத்தை பயன்படுத்தமறுத்தது. உக்ரேனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கெனவே பங்கெடுத்துள்ளது. பாலஸ்தீனம், றோம்சாசனத்த்தில் 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டதுடன், காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசசேலகம் ஆகியன பலஸ்தீனப்பிராந்தியத்தின் பகுதி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்நீதிபதிகள் அரச வழக்குத் தொடருநருக்கு 2021ஆம் ஆண்டு உறுதிப்படுத்திய போதும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கெதிராகசர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுநர் இன்றுவரைஎந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறுவரை இலக்கு வைப்பது, எரிப்பது மற்றும் பொதுமக்களைகடத்துதல் உள்ளடங்கலான மனித குலத்துக்கு எதிரானஹமாஸின் நடவடிக்கைகளானவை மானிடத்திற்கு எதிரான(Crimes Against Humanity) மோசமான மீறல் மாத்திரமன்றிமானிடத்திற்கு எதிரான சர்வதேச குற்றமொன்றாகும். இதேபோல தமது விசாரணையின் அடிப்படையில் சர்வதேசமன்னிப்புச் சபை குறிப்பிட்டது போன்று இஸ்ரேலின் முற்றுகைமற்றும் 1,500க்கும் அதிகமான சிறுவர் உள்ளடங்கலாக5,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்ட காஸா குண்டுத்தாக்குதலும் மானிடத்திற்கு எதிரான சர்வதேச குற்றமொன்றே(Crimes Against Humanity) ஆகும்.
இது தவிர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது அரசவழக்குத் தொடருநர் லூயிஸ் மொரெனோ ஒகம்போவின் (Luis Moreno Ocampo) அவதானித்தபடி, இஸ்ரேலின் காஸாமுற்றுகையானது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோகுழுவொன்றின் பெளதிக அழிவுக்கான நிலைமைகளைவழிவகுப்பானது இன அழிப்பிற்கு எதிராக சர்வதேச உடன்படிக்கையின் 2(C) சரத்தின் கீழ் இனவழிப்பாக (Genocide) ஆக அமையக்கூடும்.
நிகழ்வு பூர்வமான ஆர்ட்சக் (defacto state of Artsakh) (நாகொர்னோ-கரபாஹ்) அரசின் அழிவு மற்றும் 24 மணித்தியாலங்களில் 100,000க்கும் அதிகமானஆர்மேனியர்களின் இடப்பெயர்வின்போது ஐக்கிய நாடுகள்சபையினதும் மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல்பொறிமுறையினதும் இயலாமையை நாங்கள் அண்மையில்கண்டிருந்தோம்.
ஈழத் தமிழர்களாகிய நாமும், இவ்வாறானதொரு நிலையைஎதிர்கொண்டிருந்தோம். 2009ஆம் ஆண்டில் எமது நிகழ்வுபூர்வமான தமிழீழ நாடானது (defacto state of Tamil Eelam) சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப்பயன்படுத்தி அழிக்கப்பட்டிருந்ததுடன், இதன் காரணமாக100,000க்கும் அதிகமான தமிழர் கொல்லப்பட்டிருந்தனர். இதைநிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் எதுவும் செய்திருக்கவில்லை.ஐக்கிய நாடுகள் சபையின் மீளாய்வு அறிக்கையின் (UN Internal Review Report – Petrie Report) அடிப்படையில், படுகொலைமற்றும் இதன் பேரழிவுப் பின்விளைவுகளை ஐக்கிய நாடுகள்சபை அறிந்திருந்தபோதும் அது தலையிடுவதில்லை எனத்தீர்மானித்திருந்தது. இது தவிர, தமிழர்களுக்கெதிரான அந்தஅட்டூழியக் குற்றங்கள் புரியப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள போதும் தற்போது வரையில் எவரும் நீதிக்கு முன்நிறுத்தப்படவில்லை. இந்த சர்வதேச நீதியமைப்பின்தோல்வியால், பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறும் வகையில்பாதிக்கப்பட்டவர்களாலான சர்வதேச நீதிப் (Victims Driven Justice) பரப்புரையொன்றை 2019 ஆம் ஆண்டு நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.
தமிழ் இனவழிப்புப் போல இஸ்ரேலிய காஸாமுரண்பாட்டின்போது தற்போதைய அட்டூழியங்கள் மற்றும்போர்க்குற்றங்களானவை ஒரு சில தனிநபர்களால்புரியப்பட்டவையல்ல. இது அரசொன்றால் புரியப்பட்டது. எவ்வாறாயினும், அரசை பொறுப்புக்கூறலுக்குள் கொண்டுவருவதற்கு பல்வேறுபட்ட உள்ளூர் சட்டவாட்சி முறைமைகளில் (domestic prosecution) , இறையாண்மை விலக்கு (Sovereign Immunity) எனப்படுகின்ற கோட்பாடு தடையாகவுள்ளது. இதனை நீக்குவதற்காக,பாதிக்கப்பட்டவர்களாலான நீதிப்பொறிமுறையுடன் (Victims Driven International Justice) , உள்ளூர் நீதிமன்றங்களில் அடூழியங்கள் புரிந்த அரசுகளுக்குஎதிராக நீதி கோரும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும்இறையாண்மை விலக்கு (Sovereign Immunity) சட்டக்கோட்பாட்டை சட்டங்களில் இருந்து நீக்கும்பரப்புரையொன்றையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஆரம்பித்திருந்தது.
மேலுள்ளவை அனைத்தும் சர்வதேச அமைதி மற்றும் நீதிக்கானபுதிய பொறிமுறைகள் மற்றும் புதிய நெறிமுறைகளுக்கானஅத்தியாவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்துகின்றன. இன்னொரு அண்மைய கருத்தொன்றில் சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான லூயிஸ் மொரெனோஒகம்போ (Luis Moreno Ocampo), “நாங்கள் தொடர்ந்தும்காலத்துக்கேற்றவாறு வளருவதுடன், முரண்பாடுகளுக்குதீர்வுகள் காண்பதற்கு வேறு முறைமைகளை உருவாக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில், அமைதிமற்றும் நீதிக்கான புதிய பொறிமுறைகள் மற்றும் புதியநெறிமுறைகளுக்கான பூகோள பரப்புரையொன்றுதேவைப்படுகிறது.
தமிழர்களின் தலைவிதி தமிழர்களின் கைகளில்
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!
மேலதிக தகவலுக்கு, தொடர்பு: pmo@tgte.org