வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிவானந்தராசா சிவனேசன் (றாயூ) இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதெவது,
இன்று காலை திடீரென சுகயீனமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வழியில் மரணமடைந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.