மன்னார் நிருபர்
(25-10-2023)
வன்னி ஹோப் நிறுவனத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் முன் னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை(25) காலை வைபவ ரீதியாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
வன்னி ஹோப் நிறுவனத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட பெண்கள் மலசல கூட தொகுதி,ஆரம்ப பிரிவுக்கான மலசல கூட தொகுதி,விடுதி மாணவர்களுக்கான குளியல் அறை தொகுதி,மற்றும் குழாய்க் கிணறு ஆகியவை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
குறித்த வேலைத் திட்டங்களுக்கான நிதி உதவியை அமரர் கே.சிற்றம்பலத்தின் குடும்பத்தினர், வைத்தியர் வானி பிரேமஜித் மற்றும் வின்திரன், ராஜினி குடும்பத்தினர் வழங்கி இருந்தனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,வன்னி ஹோப் நிறுவன பிரதி நிதிகள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.