எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ‘கனடாவின் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக் கலாச்சார நிலையத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளவீணை இன்னிசை மாலை’ நிகழ்ச்சியில் வீணை இசை மழை பொழியவுள்ளார்.
அவருக்கு பக்கவாத்திய இசை வழங்க கனடாவின் புகழ்பெற்ற இசைக்குழுவான ‘மொகா ரியுனர்ஸ்’ குழுவினர் ஆயத்தமாக உள்ளனர். அத்துடன் கடுமையான பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
வீணை இசைக் கலைஞர் என். எஸ். வாசீகன் அவர்கள் கனடாவிற்கு இசைக் கச்சேரி வழங்க வந்துள்ளமை இதுவே முதற் தடவையாகும்..
இதற்கு முன்னர் உலகில் தமிழர்கள் புலம்பெயர்ந்து நாடுகளில் முக்கியமான தளங்களாக விளங்கும் இங்கிலாந்து. அவுஸ்த்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலும் ஈழத் தமிழர் அமைப்புக்களால் அழைக்கப்பெற்று பல இசை நிகழ்ச்சிகளை நடத்திய பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றவர் ஆவார்.
இலங்கையின் உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் கர்நாடக சங்கீத பாடத்திட்டங்கள் மேற்பார்வை செய்யும் குழு உறுப்பினராக கடந்த பல வருடங்களாக நிரந்தரமாக பணியாற்றி வருகின்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வீணை இசைக் கலைஞர் என். எஸ். வாசீகன் அவர்கள் இலங்கையில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக்கல்லூரி மற்றும் மவுன்லெவேணியா சென் தோமஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் என்பதும் தொடர்ந்து தென்னிந்தியா சென்று அங்கு புகழ்பெற்ற வீணை வித்துவான்களிடம் வீணை இசையைப் பயின்று தேர்ச்சி பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ‘கனடாவின் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஏற்பாட்டில் மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக் கலாச்சார நிலையத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளவீணை இன்னிசை மாலை’ நிகழ்ச்சிக்குத் தேவையான அனுமதிச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள 416 677 5511 அல்லது 416 732 1608 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்