யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் அண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார்காணி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்த மான காணி என அதிகாரிகள் உரிமைகோரியமையால் காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டது.
‘கடந்த 33 வருட காலத்துக்கு மேலாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர்வெளியேறியதை அடுத்து, அப்பகுதி மக்கள் தமது காணி களை அடையாளப்படுத்தி, எல்லைப்படுத்தும் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அப்பகுதிக்கு வந்து, இந்தக் காணிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குஉரியது. நாம் கடந்த 40 வருட காலத்துக்கு முன்பே காணி, உரிமையாளர்களிடம் இருந்து காணிகளைக் கொள்வனவு செய்து விட்டோம்’ எனத் தெரிவித்தனர்.
‘காணியை நாம் யாருக்கும் விற்கவில்லை. இது எங்களின் காணிகள். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணி எமது காணிகளில் இருந்து சற்றுத் தொலைவில்உள்ளகாணிகளே என காணி உரிமையாளர்கள் பதிலுக்குத் தெரிவித்தனர்.
அதனை ஏற்கமறுத்த அதிகாரிகள், ‘இந்த காணிகளையும் தமது நிறுவனம் கொள்வனவு செய்து விட்டதாகத் தெரிவித்ததுடன், இது உங்கள் காணி தான் என்பதற்கு எங்களுக்கு உறுதியை காண்பித்து உறுதிப்படுத்துங்கள்’ எனக் கூறினர்.
‘அதற்கு காணி உரிமையாளர்கள் நாங்கள் எதற்கு உங்களுக்கு உறுதி காட்ட வேண்டும்?
உங்களின் உறுதிகளை பரிசீலித்து உங்கள் காணி எங்கே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என்று தெரிவித்தனர்.
அதனை அடுத்து, ‘இந்தக் காணிகளையும் கொள்வனவு செய்து விட்டோம். அதற்கான உறுதிகள் எங்களிடம் உள்ளன. ஆதாரங்களுடன் வருகிறோம்’ எனத் தெரிவித்துவிட்டுஅவர்கள் அங்கிருந்து சென்றனர்.