வவுனியா வடக்கு மரக்காரம்பளையில் அமைந்துள்ள வடமாகாண தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்திற்கு (Provincial Information Technology and Distance Learning Hub) Ratnam Foundation – UK அமைப்பின் ஸ்தாபகர் வைத்திய கலாநிதி .இ.நித்தியானந்தன் அவர்களால் இவ் ஒலி அமைப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதனை இவ் அமைப்பின் சார்பில் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.சு.கிருஸ்ணகுமார் அவர்கள் இந் நிலையத்தின் முகாமையாளர் கலாநிதி மா.தயாகரன் அவர்களிடம் கையளித்தார்.
இதன் போது இந் நிலையத்தில் நடைபெறும் செயலமர்வுகள்,பயிற்சிபட்டறைகள், கருத்தரங்குகள் வதிவிட பயிற்சி நெறிகள் என்பவற்றிற்கு இவ் உபகரணப்பயன்பாடு அதிஉட்ச பயன்பாட்டை கொண்டிருக்கும் எனவும் இதற்கான தனது நீண்ட நாள் கோரிக்கையினை பூர்த்தி செய்த வைத்திய கலாநிதி.இ.நித்தியானந்தன் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை கலாநிதி மா.தயாகரன் அவர்கள் தெரிவித்து கொண்டார்.
இந் நிலையம் வதிவிடப் பயிற்சிநெறிக்கான பயிலுனர் தங்குமிட வசதிகள், தகவல் தொழினுட்ப கணனி கூடங்கள், போசன கூட வசதிகள் உள்ளடங்கலாக இயற்கை வனப்பு மிக்க அமைதியான சூழல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.