பு.கஜிந்தன்
வடக்கில் 370 அதிபர் மற்றும் பிரதி அதிபர்களை நியமிக்க நடவடிக்கை – மாகாண பணிப்பாளர் தெரிவிப்பு
வடமாகாணத்தில் பதின்மூன்று வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள அதிபர் மற்றும் பிரதி அதிபர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாளடாவிய நீதியில் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கான நேர்முகத் தேர்வுக்காக சுமார் 4500 பேர் பங்குபற்றிய நிலையில், வடக்கில் சுமார் 370 பேர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.