(26-03-2023)
மன்னார் பிரதேசத்தில் உள்ள பெண்கள் மத்தியில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண்களுக்கு இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டிலும், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் ஐசிங் கேக் மற்றும் ஏனைய வகை கேக் உற்பத்தி பயிற்சி திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த தொழில் பயிற்சியில் கைத்தொழில் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் ,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள் ,தீவக பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக தெரிவு செய்யப்பட்ட பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தொழிசார் கேக் உற்பத்திகள் அலங்கார கேக் உற்பத்திகள் மற்றும் அவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பிலும் பயிற்சி வழங்கப்பட்ட தோடு இறுதியில் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டது.