(சங்கானை – கனடா)
தோற்றம் 03-07-1945
மறைவு 05-10-2023
” பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
ஈழமணித்திருநாட்டின் வடபால் திகழும்
யாழ்ப்பான நகரின் மேற்குத் திசையில்
அமைந்துள்ள கல்வியழகும் கலையழகும்
கலந்துறையும் சங்கானை என்னும் ஊரில்
ஊர்மெச்ச வாழ்ந்த உத்தமராம் முத்துகுமாரசாமி
அன்னலட்சுமி தம்பதியினர் செய்தவத்தால்
இத்தரையில் வந்துதித்த இனிய மகள்
தன் குலம் வாழ வந்துதித்த அன்பு மகளுக்கு
திலகவதி என்னும் திருநாமம் சூட்டி அன்புடன்
வளர்களானார்கள் இவருடன் பிறந்த இனிய
சகோதர சகோதரிகளான விரதசாரணி சத்தியவதி
குணசீலன் அற்புதராணி மாறும் கருணாகரன்
எனும் அறுசுவை உணவைபோல அருங்குணங்கள்
கொண்ட அறுவரை பிள்ளைகளாய் பெற்ரெடுத்து
ஊர் மெச்ச பிள்ளைகளை உத்தமர்களாக வளர்த்து
காலமெல்லாம் கணுக்குள் வைத்து காத்தார்கள்
சின்ன வயதில் செல்லமகள் திலகவதி தன்
ஆரம்பக் கல்வியை பண்டத்தரிப்பு மகளிர்
கல்லூரியில் கற்கத்தொடங்கினார் கல்வியில்
மட்டுமன்றி தையல் கலையிலும் சிறந்து
விளங்கினார் அதுவுமன்றி ஆலயங்கள்
தோறும் சென்று பண்ணோடு பஜனைகள்
தேவாரங்கள் பாடி பலரையும் மகிழ்வித்தார்
வளர் பிறைபோல வளர்ந்து வந்த செல்லமகளுக்கு
காலம் அறிந்து பயிர் செய்யும் கமக்காரனை போல
பருவமறிந்து பெற்றோர்கள் இல்வாழ்க்கையில்
இணையவைக்க பண்பின் உறைவிடமாய் பணிவின்
பெருவடிவாய் திகழ்ந்த பாலச்சந்திரன் பாக்கியலட்சுமி
தம்பதியினரின் மூன்றாவது மகனாய்மார்கழி மாதம்
11 திகதி 1977ம்ஆண்டு வளம் சிறக்க குலம் துலங்க
வந்துதித்த குனக்குன்றாம் ஞானசபாபதி தம்மை
அன்புமகள் திலகவதியின் இல்வாழ்க்கையில்
இணையவைத்தார்கள்
இல்வாழ்க்கை என்னும் இன்பச் சோலையில்
இருவரும் பெற்ற இன்பத்தின் பயனாய்
மூத்த மகனாய் வந்துதித்த முத்தான மகனுக்கு
கோகுலதீபன் எனும் நாமம் சூட்டி நலமோடு
வளர்த்து முறையே பிரியாளினியையும் காந்தருபன்
எனும் முக்கனிகள்போல பிள்ளைகள் மூவரை பேரெடுத்து
கல்வியறிவில் கலங்கரை விளக்குகளாய் மறவர்களை
மதிக்கும் மாண்புடைய மக்களாய் வளர்த்தார்கள்
இக்கால கடத்தில் திருமகள் திலகவதி Montessori
ஆசிரியையாக ஞானவைரவர் ஆலயபாடசாலையில்
பணிபுரிந்தார் அன்புக்குழந்தைகள் பலருக்கு
அறிவுக்கண் திறந்துவைத்தார் காலங்கள் செல்ல
நாட்டின் அசாதாரணமான சூழ்நிலையில் தன்
கணவர் பிள்ளைகளுடன் 1992 ம் ஆண்டு பங்குனி மாதம்
கவினுறு தேசமாம் கனடாவுக்கு வந்து அமைதியாக
சிறப்பொடு வாழ்ந்து வந்தார்
தங்கள் மூத்த மகன் கோகுலதீபனுக்கு ரோகினி என்பவரையும்
பிரியாழினிக்கு சுரேகரன் என்பவரையும் காந்தருபனுக்கு
அன்றியா என்பவரையும் மணவாழ்க்கையில் இணையவைத்து
மனமகிழ்வோடும் மனநிறைவோடும் வாழ்ந்து வந்தார்
” ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் -தன்மகனைச் (மக்களை )
சான்றோன் எனக்கேட்ட தாய் ” என்ற வள்ளுவனின்
வாய் மொழிக்கேற்ப தன மக்களாலும் மருமகளாலும்
பெருமை பெற்று வாழ்ந்த மங்கையர் திலகமாய் வாழ்ந்தார் இவர்.
அன்னாருக்கு அஷ்வின் அஷ்ஷிகா தனுஷன் ஹாசினிநந்தானியல்
மற்றும் நரியா ஆகிய பேரன்புகொண்ட பேரப்பிள்ளைகளுடன்
பெரிதும் மனமுவந்து பிரியமுடன்பெருமகிழ்வுடன் வாழ்ந்து வந்தார்
சிறார்களுடன் மட்டுமன்றி பெரியவர்களுடனும் பிரியமுடன் நடந்து கொண்டார்
செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து சிலகாலம் பணியாற்றினார்
இங்குள்ள மூத்தோர் சங்கங்களில் இணைந்து பல்வேறு சுற்றுலா
பயணங்கள் மேற்கொண்டு அத்தனைபோரையும் அன்பால் அரவணைத்து
அங்கத்தவர்களோடு அத்தனை மகிழ்வுடன் வாழ்ந்திருந்தார்
அத்துடன் இந்தியா இலங்கை இங்கிலாந்து இந்தோனேசிய சிங்கப்பூர் மலேசியா
எனப் பல்வேறு நாடுகளுக்கும் பறந்து பறந்து சென்று மிகமகிழ்வோடு
இறைபணியை தன் கண்ணெனக் கருதி தன வாழ்வின் பெரும் பகுதியை
இறைபணிக்கே அர்ப்பணித்து பல்வேறு பணிகள் ஆற்றி மகிழ்ந்துவந்தார்
அதுவுமன்றி செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கியதோடு தன்
பேரப்பிள்ளைகளுக்கும் ஆசிரியராக இருந்து அறிவூட்டி வழி நடத்தி
தான்அறிந்த ஏனைய உள்ளக.விளையாடுக்களிலும் சிறந்து விளங்கினார்.
பண்பும் பணிவும் பாசமும் நேசமும் கொண்ட அம்மையார் தன்
கண்மூடும் காலம் வரை கைப்பிடித்த நாயகனாம் ஞானி அவர்களின் கைப்பற்றி
இணையில்லாத இல்லத்தரசியாய் இல்வாழ்வில் சிறந்து விளங்கினார்.
அன்னாரின் மறைவு பற்றிய செய்தியை அறிந்து உடனடியாக எமது இல்லத்திற்கு நேரடியாக வருகை தந்து தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளின் தொடர்பு கொண்டு அனுதாபங்களைத் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் உணவு மற்றும் பானங்களை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.
அத்துடன் எமது அன்னையின் இறுதிக்கிரியைகளின் போது உடனிருந்தவர்களுக்கும் அவரது பூதவுடன் வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வருகை தந்து தங்கள் அஞ்சலிகளைத் தெரிவித்தவர்களுக்கும் தொடர்ந்து தகனக்கிரியை நடைபெற்ற இடத்திற்கும் வந்து எம்மோடு கூடவே இருந்து எம்மைத் தேற்றியவர்களுக்கும் இன்னும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் அளித்த நண்பர்கள் . உறவினர்கள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி.
அத்துடன் எதிர்வரும் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 11.00 தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ஸ்காபுறோ ஐயப்பன் ஆலய கீழ் மண்டபத்தில் நடைபெறவுள்ள எமது அன்புக்குரிய திலகவதி ஞானசபாபதி அவர்களி 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளிலும் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு:_647.293.6854 / 647.291.9993 / 647.330.6565