பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ரி.பி ஹன்ற் ஞாபகார்த்த ஓவிய கூடத்தின் வடக்கு மாகாணம் தழுவிய கலைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவம் 05/11/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஓவிய கூட வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
ரி.பி ஹன்ற் ஞாபகார்த்த ஓவிய கூடத்தின் ஸ்தாபகர் திருமதி யோகமணி அழகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்குமார் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ்ஸூம்,
கௌரவ விருந்தினர்களாக சிவபூமி நிலையத் தலைவர் ஆறு திருமுருகன்,அமெரிக்கன் சிலோன் தேவாலய தலைவர் தேவகுணானந்தன் அடிகளார், யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செனரத், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் மனோகர், விரிவுரையாளர் பிரசாந், வடமராட்சி வலயக்கல்வி அலுவலக அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆரியதாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.