பு.கஜிந்தன்
5 மற்றும் 6ஆம் திகதிகளில் திஸ்ஸ விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே அந்த பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என மல்லாகம் நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த கட்டளையில் உள்ளதாவது,
மல்லாகம் நீதவான் நீதிமன்றம்
வழக்கு இல: AR/3055/2023
1. சட்டத்தரணி காந்தீபன்
2. சட்டத்தரணி சுகாஸ்
3. பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்
4. செல்வராஜா கஜேந்திரகுமார்
மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்கள்!
கட்டளை
மேற்குறிப்பிட்ட தங்கள் அனைவருக்கும் !
05.11.2023 ம் திகதி மற்றும் 06.11.2023 ம் தினங்களில் திஸ்ஸ விகாரையில் ‘கஜினமகா உற்சவம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு தங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தினால் குழப்பம் ஏற்படுத்தப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் மேலும், தமிழ் சிங்கள மக்களிடையே இனவாதத்தினை தூண்டக்கூடிய வாய்புக்கள் உள்ளதாகவும் மன்றுக்கு அறிக்கையிடப்பட்டு குற்றவியல் நடபடிமுறைச்சட்டக்கோவையின் பிரிவு 106 இன் கீழ் தங்களுக்கெதிராக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்ற கட்டளையினை வழங்குமாறு பலாலி பொலிஸாரினால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விண்ணப்பம் மற்றும் அறிக்கை என்பவற்றில் கவனம் செலுத்தி நாளைய தினமான 05.11.2023 திகதியும் 06.11.2023ம் திகதியன்றும் திஸ்ஸ மகா விகாரைக்கு அண்மையில் சொத்துக்களுக்கோ அல்லது ஆட்களுக்கோ ஆபத்துக்கள் எவையும் ஏற்படக்கூடாது என்ற கரிசனையின் மீது பின்வருமாறு மன்றினால் கட்டளையாக்கப்படுகின்றது-
1. ஆர்ப்பாட்டத்தில் நடைபெறவிருக்கும் ஈடுபடுபவர்கள் திஸ்ஸ கஜினமகா உற்சவத்திற்கு குழப்பங்களோ ஏற்படுத்தக்கூடாது. விகாரையில் தடைகளோ
2. ஆர்ப்பாட்டக்காரர்கள் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் அடிப்படை கீழ் உரிமைகளை அனுபவிக்கையில் அமைதிக்குப்பாதகம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது சொத்துக்களுக்கோ அல்லது ஆட்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது.
காயத்திரி சைலவன் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் மேலதிக நீதவான் 04.11.2023
என குறிப்பிடப்பட்டுள்ளது.