மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை, போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் ன்று ஞாயிற்றுக்கிழமை 05-11-2023 அன்று கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அன்று காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலையத்துக்கு மன்னால் ஒன்று கூடிய மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளரின் இடம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து அந்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஆர்பாட்டம் முடிவுற்ற பின்னர் மாணவர்கள் பஸ்வண்டியில் கிழக்கு பல்கலைக்கழகத்தை நோக்கி பஸ்வண்டியில் பிரயாணித்த போது பின்னால் சென்ற சந்திவெளி பொலிசார் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வைத்து பஸ்வண்டியை நிறுத்தி அதில் 6 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சட்டவிரோத ஆர்ப்பாட்டம் மற்றும் பொது வீதி போக்குவரத்துக்கு இடையூறு விளைத்த குற்ற்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுளதாக பொலிசார் தெரிவித்தனர்