ஒன்றாரியோ மாகாணத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாகாணத்தின் 2023 க்குரிய இலையுதிர் கால வரசெலவுத் திட்ட அறிக்கை வெளிவந்துள்ளது.
ஒன்றாரியோமாகாணத்தின் பொருளாதாரத்தை இன்னும் பலப்படுத்துவதற்கு ஒன்றாக ஒரு வலுவான ஒன்ராறியோவை உருவாக்குதல் (Building a Strong Ontario Together) என்ற
தலைப்பில் ஓர் திடத்தை ஒன்றாரியோ மாகாணத்தின்நிதியமைச்சர் Peter Bethlenfalvy அவர்கள் 2023 ஒன்ராறியோ பொருளாதாரக் கண்ணோட்டம் என்ற தலைப்பில் மற்றும் நிதி மதிப்பாய்வுடன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்
” எமது ஒன்றாரியோ அரசாங்கம் கூறிய கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் வகையில் இத் திட்டத்தை வடிவமைத்துள்ளார்கள். இந்த திட்டத்தின் முக்கிய இலட்சியங்கள்:
– தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற தன்மையை நிவர்த்தி செய்யவேண்டும்,
– வளர்ந்து வரும் சமூகங்களில் முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்கவேண்டும்,
– எதிர்கால சந்ததியினருக்கு வலுவான நிதி அடித்தளத்தை அமைக்கவேண்டும்.
ஒன்ராறியோ குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 500,000 பேர் மாகாணத்திற்கு புதிதாக வந்துள்ளனர்.மற்றும் 2023 இன் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 170,000 க்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன” என்றார்
“ஒன்ராறியோவின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு வழி வகுக்கும் வகையில் 2023 க்குரிய இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று Markham-Thornhill தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் , லோகன் கணபதி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில் “தற்பொழுதைய வீட்டு சிக்கல்களை தீர்ப்பதற்கும், வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில்சரியான முதலீடுகளுடன் சரிபடுத்துவதற்கு புதிய ஒன்டாரியோ உள்கட்டமைப்பு வங்கி (Ontario Infrastructure Bank) திடத்தை செயல்படுத்தவுள்ளார்கள்.
மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனையை போன்ற உடல் நலம் சார்ந்த திட்டங்களும் செயல்படுத்தப்படுத்திவருகின்றன. எங்கள் அரசங்கத்தின் நோக்கம் அனைவருக்கும் வலுவான, அணுகக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக நடைபெற இருக்கும் மாற்றங்கள் மூலம் Markham- Thornhill தொகுதியை சேர்ந்த மக்கள் பல பயன்களை பெறஉள்ளார்கள்.
முக்கியமான உள்கட்டமைப்பை விரைவாக்குவதற்கும், இந்த காலகடத்துக்குரிய தொழில்நுட்பத்துடன் உருவாக்குவதற்கும் தேவையான முதலீடுகளை மேலும் ஈர்பத்திற்கும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் புதிய வழிகளை இந்த திடத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறது.
மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள https://logankanapathi.ca/ என்ற இணையத்துக்கு சென்று
கண்டறியலாம்.