பு.கஜிந்தன்
தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி நாடகக் குழுவினரைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (9) இடம்பெற்றது.
மருனார்மடம் சந்தியிலிருந்து காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தை அண்மித்ததும் மேலைத்தேய வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாடசாலை பிரதான மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலயப்பணிப்பாளர் திரு.பிரட்லீ அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தமிழ்ப்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.க.சந்திரலிங்கம் அவர்களும் முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.ந.கிருபாகரன் அவர்களும் நாடகத்துறை ஆசிரிய ஆலோசகர் மற்றும் நாடகத்தின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணித்த துறைசார் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்வு நடைபெற்றது நடைபெற்றது.