இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கங்குவா படத்தின் புதிய பாதாகை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த பாதாகையில் நடிகர் சூர்யா கையில் நெருப்புடன் நிற்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாக இருக்கிறது.