ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில், ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் குரலில் ஒரு கதையும், காவல்துறையாக வரும் கீர்த்திசுரேஷ் குரலில் ஒரு கதையும் என இந்த முன்னோட்டக் காட்சி இரண்டு கதாபாத்திரங்களின் குரலில் மொத்தப் படத்தின் மையக்கதையை விவரிக்கிறது. பரபரப்பான திருப்பங்களுடன், மாறுபட்ட கதைக்களத்தில், ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில். வெளியாகியிருக்கும் இந்த காணொளி, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
![ஜெயம் ரவியின் “சைரன்” பட முன்னோட்டம் வெளியீடு](https://uthayannews.ca/wp-content/uploads/2023/11/Jayam-ravi.jpg)