கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஜப்பானைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் வெளியாக உள்ளது. இதனை ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இதற்கொரு பின்னணி கதை உள்ளது.
நலன் குமாரசாமியின் சூதுகவ்வும் வெளியானதும், சூர்யாவை வைத்து ஒரு படம் பண்ண அவரை தனது நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்தார் ஞானவேல்ராஜா. நலன் குமாரசாமியும் மை டியர் டெஸ்பரடோ கொரிய படத்தின் உரிமையை முறைப்படி வாங்கி வைத்திருந்தார். அதனை எக்ஸிமோ காதல் என்ற பெயரில் சூர்யாவை வைத்து எடுப்பதாக திட்டம்.