கனடாவாழ் சாயி அன்பர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கும் மனித நேய உதவிகளை வழங்கி வருகின்றார்கள்
பகவான் ஸ்ரீசத்திய சாயிபாபாவின் 98வது பிறந்த தினம் வெகு விமரிசையாக உலகம் எங்கும் நவம்பர் மாதம் 23ம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகின்றது. கனடா ஸ்காபுரோவில் அமைந்துள்ள சத்திய சாயிபாபா நிலையத்திலும் காலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையும் மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையும் விசேட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பகவானின் போதனைகளில் அவருடைய பக்தர்களுக்கான ஒன்பது அம்ச ஒழுக்கக் கட்டுப்பாடு முக்கியமானது அவையாவன.
- தினசரி தனது மதவழக்கப்படி வழிபாடு தியானம் செய்தல் வேண்டும்
- வாரம் ஒரு தடவை குடும்பத்தினருடன் பஜனை செய்தல் வேண்டும்
- சாயி குடும்பத்தின் பிள்ளைகள் ஆன்மீகக் கல்வியில் ஈடுபடுதல் வேண்டும்.
- சாயி நிலையங்களால் ஒழுங்குபடுத்தும் சமூக சேவைகளிலும் மற்றும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளல் வேண்டும்.
- மாதத்தில் ஒரு தடவையாவது சாயி நிலையத்தில் கூட்டு வழிபாடு பஜனையில் ஈடுபடுதல் வேண்டும்.
- சாயி பற்றிய இலக்கியங்;களையும் மற்றைய சமய இலக்கியங்களையும் ஞானிகளின் வாழ்கையும் பற்றி கற்றல் வேண்டும்.
- எல்லோருடனும் அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல் வேண்டும்
- மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுதல் தவிர்த்தல் வேண்டும் (அதுவும் அவர்கள் இல்லாத இடத்தில்)
- தேவையற்ற செலவுகளைக் குறைத்து அவற்றை சேமித்து மனித சமுதாயத்துக்கு பிரயோசனபடுத்துதல் வேண்டும்.
ஸ்காபுரோ சத்திய சாயி பாபா நிலையம் ஆரம்க்கபட்டு 36 வருடங்கள் கடந்த நிலையில் 2011ம் ஆண்டு தனக்கான ஒரு இடத்தை நிறுவி தனது பணிகளைச் சுவாமியின் கட்டளைப்படி நடாத்தி வருகின்றது.
இங்கு கிட்டத்தட்ட 600 மாணவர்கள் சத்திய சாயி கல்வியில் 5 வயது முதல் 17 வயது வரை கல்வி கற்று வருகின்றனர். இக்கல்வியில் பயின்ற பிள்ளைகள் தற்போது நல்ல ஒழுக்க சுpலர்களானவும் உயர்தொழில்களில் ஈடுபட்டு வரும் வேளையில் அடுத்த சந்ததியினருக்கு தாம் கற்றவற்றை போதித்தும் வருகின்றார்கள். ஆரம்பத்தில் கல்வி பயின்றவர்கள் தற்போது தமது குழந்தைகளை இக்கல்வியில் சேர்த்திருப்பது அவர்கள் எவ்வளவு தூரம் இக்கல்வியில் பயன் பெற்றார்கள் என்பதற்கு சான்றாகும். சாயி நிலையத்தில் சகல வசதிகளும் கொண்ட நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சாயி பஜனைகள் வியாழக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாது இடம் பெற்று வருகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் உணவு வழங்கும் சேவை (நாராயண சேவை) ஒவ்வொரு இடங்களிலும்; வசதி குறைந்தோருக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
சுவாமியில் 100வது பிறந்த தினம் 2025ம் ஆண்டு வெகு விமரி;சையாகக் கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்கு முன்னோடியாக 95வது பிறந்த தினத்தில் இருந்தே நிகழ்ச்சிகள் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பக்தர்கள் எல்லா நாடுகளிலும் இருந்து புட்டபர்த்தி வந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறாக சுவாமியின் “ஊநடைiபெ ழn னுநளசைந” – ஆசைகளைக் குறைத்து மற்றவர்களுக்கு உதவி செய்தல்.என்னும் திட்டத்தின் கீழ் கனடாவாழ் சாயி அன்பர்கள் கோவிட் ஆரம்ப காலத்தில் இருந்து தாயகத்தில் உள்ள எமது உறவுகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். கூடுதலாக போரால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள். 2021ம் ஆண்டு சுவாமியில் 96 வது பிறந்த தின நிகழ்வின் போதும் 2022ம் ஆண்டு 97வது பிறந்த தின நிகழ்வின் போதும் 1000 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் (அரிசி, பருப்பு, சினி, சோப்) போன்றவற்றை; வழங்கியுள்ளார்கள். இதில் முல்லைத்தீவு தண்ணியூற்று சாயி நிலையம் பெரும் பங்கை வகிப்பதோடு கிழக்கு மற்றும் மலையக் சாயி நிலையங்களும் இணைந்து உதவி செய்கின்றன. 2022ம் ஆண்டு 23,000 டொலர் பெறுமதியான பணம் சேகரிக்கப்பட்டு (கிட்டத்தட்ட 62 இலட்சம் ரூபாய்கள்) 1000 குடும்பங்களுக்கு உலர் உணவ வழங்கப்பட்டதோடு 30 இலட்சம் ரூபா செலவில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 5 பிள்ளைகள் கொண்ட விதவைத்தாய்க்கு ஒரு வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இவ்வருடமும் இதுபோன்று முல்லைத்தீவு தண்ணியூற்று, கிழக்கு மாகாணத்தில் சமுத்திரபுரம் எருகில், வினாயகபுரம் போன்ற பகுதிகளில் வாழும் வலுவிழந்தோருக்கும் முதியோருக்கும் மலையகத்தில் கற்றன், நாவலப்பிட்டி, வெலிக்கந்த தோட்டத் தொழிலாளர்களுக்கும் இம்முறை அரிசி, மாவு, சீனி தேயிலை போன்ற உலர் உணவுப் பொருட்கள், 1000 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இப்பகுதியில் உள்ள சாயி நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளன.
பகவான் ஸ்ரீசத்தியசாயி பாபவினால் ஆரம்பிக்கப்பட்ட டுஙைரனை டுழஎந அதாவது இரத்ததானம் மூகாம் எமது சாயி அன்பர்களால் கடந்த 25 வருடங்களாக நாடாத்தப்பட்டு வருகின்றுத 5321 குinஉh யுஎந அமைந்துள்ள எமது சாயிநிலையம் 2011 ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பின்னர் வருடத்தில் இரண்டு தடவைகள் சித்திரை, புரட்டாதி மாதங்களில் 100 மேற்பட்ட அன்பர்களால் ஒரே நாளில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.
சாயி அன்பர்கள் அனைவரும் இந்நிலையத்தில் வாரந்தோறும் நடைபெறும் சாயி பஜனைகளில் கலந்து பயன் பெறுங்கள்.
Love all serve all: Help ever Hurt Never
– பாலா பாலச்சந்திரன்