ஐயப்பன் விரதத்தின் 60 நாள் மண்டலகபிசேக பெரு விழாவில், முதலாவது நாள் விரதத்தின் மாலையிடும் உற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கோண்டாவில் ஸ்ரீ ஐயப்பன் சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் உற்சவ கிரியைகளை ஆலய பிரதம குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்ததுடன் கன்னிக் குருசாமிமார்கள், ஏனைய குருசாமிமார்களுக்கு திருமாலை அணிவித்து விரதமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பலபாகங்களில் இருந்தும் வருகைதந்த குருசாமிமார்கள் தமது விரதத்தினை ஆரம்பித்தனர்.