நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பதாகையை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பதாகையை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.