தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினேம் நாட்டில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது. தங்கம் எடுப்பதற்காக அங்குள்ள சிலரால் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
சுரினேம் நாட்டில் தங்கச் சுரங்கம் அமைக்க, அமெரிக்கா, கனடா நாட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது .