அனுராதபுரத்தில் 19.11.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்டத்திலான பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனப் போட்டியில் வட்டு இந்து கல்லூரி மாணவிகள் முதலாவது இடத்தை பெற்றுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இவர்கள் வலய மட்டம், மாவட்ட, மாகாண மட்டங்களில் தெரிவாகி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவிகளை பல வகையிலும் ஊக்கமளித்து துணை புரிந்த நடன ஆசிரியர் திருமதி சகிலா சுதாகரன், சங்கீத ஆசிரியர் திருமதி நித்தியா தவக்குமார், விஞ்ஞான ஆசிரியர் திரு சின்னப்பு சதீஸ், பக்கவாத்தியக் கலைஞர் திரு லோ.நிமலன் மற்றும் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலைச் சமுகத்தினர் அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இத்தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கான போக்குவரத்து மற்றும் அனைத்து செலவீனங்களுக்குமான நிதி உதவிகளை கலாநிதி திரு இ.நித்தியானந்தன் (Ratnam Foundation, U.K) அவர்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.