பிரிட்டன் இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் லயன்ஸ் மூலம் சர்தேசளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மான். இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் இரு பெண்கள் பற்றி கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது. சீக்கிய பேரரசின் கடைசி அரசரான மஹாராஜா துலீப் சிங்கின் மகள் சோபியா துலீப் சிங் வாழ்வையொட்டிய கதை பகுதியாகவும் 1990-களில் வாழும் படித்த புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது. இருபதாம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் சோபியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியல் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர். பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் இந்தப் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இப்படத்தை இயக்கவுள்ளார்.