(மன்னார் நிருபர்)
(23.11.2023)
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் (DEAF LINK) அமைப்பினால் கடந்த வருடம் (2022)மாசி மாதம் முதல் முதல் “கௌரவத்துடன் முதியோருக்கான சமூகம் சார் உட்படுத்தல் அபிவிருத்தி ” எனும் தொனிப்பொருளில் வயோதிபர்களுக்கான பல்வேறு செயல் திட்டங்களை அமுல் படுத்தி வருகின்றனர்.
குறித்த திட்டம் 39 மாதங்களை கொண்ட ஒரு செயல்திட்டமாக உள்ளது.இந்த நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயல்திட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை(23) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணிவரை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
குறித்த ஊடக கலந்துரையாடல் மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.என்.நிமால் தலைமையில் இடம்பெற்றது.
-இதன் போது மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் அமைப்பின் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் செல்வி. ஜெய பியூலா கலந்து கொண்டார்.
-மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,வைத்தியர்,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் அமைப்பினால் வயோதிபர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு செயல் திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
குறிப்பாக முதியோர்களுடன் இடம் பெறுகின்ற செயல்திட்டங்கள்,முதியோர் தொடர்பான விடயங்கள்,அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருதல்,உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவரிக்கப்பட்டது.
குறிதத் கலந்துரையாடலில் கலந்து கொண்ட வயோதிபர்கள்கள் தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தியதோடு,மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் அமைப்பினால் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் குறித்தும் விவரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.