மேலும் இரு பெண்மணிகள் வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து தெரிவு
இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.
வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். இந்தத் தெரிவுப் பட்டியலில் மேலும் இரு பெண்மணிகள் முறையே வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து நீதிபதிகளாக தெரிவு செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான மாதுரி நிரோசன் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
தமிழ் நீதிபதிகளில் யாழ்ப்பாண.வரலாற்றில் ஓர் இளம் நீதிபதியாக மாதுரி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், மாதுரி அகில இலங்கை ரீதியில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.