தமிழக அரசியல் களத்தில் தேடும் நிலையில் அதிமுக இருப்பதாக பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் விமர்சித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக அலுவலகத்தில் சக்தி கேந்திரா, பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
‘தமிழ்நாட்டில் எதிர்கட்சிகள் மிரளும் வகையில் பாஜக அசுர வளர்ச்சியடைந்துள்ளது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். தமிழக அரசியல் களத்தில் அதிமுகவை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சக்தி கேந்திரா, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கு கடுமையாக உழைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.