தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாயார் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிகரம் ச செந்தில்நாதன் எழுதிய ” குடியரசு தலைவர் ஆளுநர் அதிகாரங்கள்” என்ற புத்தகத்தை வழங்கி வாழ்த்து பெற்றார்.