(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கனடா ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை மற்றும் ஆய்வுகள் பிரிவின் முதலாவது தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு அவர்கள் 2024 இல் பதவியேற்கவுள்ளார் என ரொறன்ரோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் மேற்படி நியமனம் தொடர்பாக. ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை மற்றும் ஆய்வுகள் தொடர்பான பிரிவை நிர்வகிக்கவுள்ள வரலாறு மற்றும் உலகளாவிய ஆசிய ஆய்வுகள் திட்டப்பிரிவினர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு உள்ளன.
மிகவும் ஆழந்தும் மற்றும் நுணுக்கமான தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து,எமது ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் (UTSC) உள்ள மிழ் ஆய்வுகள் பிரிவின் முதலாவது தலைவராக சித்தார்த்தன் மௌனகுரு நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் இருக்கை என்னும் பிரிவானது எமது பல்கலைக் கழகத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார ஆய்வுகள் துறையில் உலகளாவிய ஆசிய ஆய்வுகள் திட்டத்தின் கீழ் இயங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு ஒரு சிறப்பு மைல்கல்லாக அமைகின்றது. இது எமது ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பொது நிதி திரட்டும் முயற்சிகளில் ஒன்றின் உச்ச நிலையை பிரதிபலிக்கிறது என்பதும் இந்த திட்டம் உள்ளடக்கிய சிறப்புக்கான எங்கள் அர்ப்பணிப்புக்களையும் அடிக்கோடிட்டும் காட்டுகிறது. எமது பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை மற்றும் ஆய்வுகள் பிரிவை நிறுவுவதற்கு உலகெங்கிலும் உள்ள சுமார் 3,800 நன்கொடையாளர்களின் நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் இருக்கை இன்க் நிறுவனம் ஆகியவற்றுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான புலமைசார் சிறப்பு மற்றும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தனித்துவமான திரட்சியை பேராசிரியர் மௌனகுரு கொண்டு வருகிறார். மானுடவியலில் இணை பேராசிரியராகவும், சமூகவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் தெற்காசிய ஆய்வுகள் திட்டத்துடன் இணைந்து பணியாற்றி அனுபவம் இவருக்கு உ ண்டு. மேலும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் முன்னாள் துணை முதல்வராகவும் (இளங்கலை படிப்புகள்), அத்துடன் அப்பீடத்தினால் மேற்கொள்ளப்பெற்ற முக்கிய ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியும் உள்ளார். மேலும், பேராசிரியர் சித்தார்த்தன் அவர்கள் நியூட்டன் சர்வதேச அங்கத்துவம் (இங்கிலாந்து), பெற்றராகவும் விளங்குகின்றார். மேலும் சமீபத்தில் கொலீஜியம் ஹெல்வெட்டிகம், ETH (சுவிட்சர்லாந்து) கல்வி நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்ற மூத்த கல்வியாளராகவும் இருந்தார். மேலும். தெற்காசிய மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைப் புரிந்துகொள்வதில் இவர் வகித்த பொறுப்பான பதவிகள் உதவின. அவரது படைப்பு அதன் அசல் தன்மை மற்றும் முக்கியத்துவத்திற்காக பாராட்டைப் பெற்றது. அவரது ஆழமான அறிவும் மற்றும் புதுமையான ஆய்வுகளும் நிச்சயமாக நமது ரொறன்ரோ கல்விச் சமூகத்தை வளப்படுத்தும் என்றும் மற்றும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்திலும் கனடா முழுவதிலும் உள்ள தமிழ் ஆய்வுகளின் வளர்ச்சிக்கான பாடத்திட்டத்தை நிரல்படுத்தவும் இவரது பதவியேற்பு வழிசெய்யும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம். பேராசிரியர் மௌனகுரு 2024ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதியன்று பொறுப்பேற்பார்.
இத்தகைய மைல்கல்லை உதவிய நமது நன்கொடையாளர் சமூகத்தின் ஆதரவுடனும் நம்பிக்கையுடனும் மட்டுமே நாம் அடைய முடியும். எனவே ஒவ்வொரு பங்களிப்பாளர்களுக்கு எங்கள் ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம் . உங்கள் ஆதரவு தமிழ் ஆய்வுகளை மட்டுமல்ல, கலாச்சார புரிதலுக்கான பரந்த தேடலையும் மேம்படுத்தியுள்ளது.
நன்றி!
மேற்படி பேராசிரியர் சித்தார்த்தன் அவர்களின் நியமனம் தொடர்பாக கருத்து தெரிவித்த கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான சிவன் இளங்கோ அவர்கள் கூறுகையில் 2″018 இல் கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் இருக்கை இன்க் ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் இருக்கைக்கு தேவைப்பட்ட தொகையான $3 மில்லியன் கனடிய டாலர்கள் எமது நன்கொடையாளர்களின் பரோபகார சிந்தனை மூலமே சாத்தியமானது. எனவே தான் நாம் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் எமக்கான தமிழ் இருக்கையை நிதர்சனமாகக் காண முடிகின்றது. மேலும் தமிழ் ஆய்வுக்கான முதலாவது தலைவராகப் பேராசிரியர் மௌனகுரு நியமனம் செய்யப்பட்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”என்றார்.
மேலும் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை மற்றும் ஆய்வுகள் பிரிவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள பேராசிரியர் சித்தார்த்தன் அவர்கள் ஈழத்தமிழ் கல்விச் சமூகம். பல்கலைக் கழகச் சமூகம் மற்றும் படைப்பிலக்கிய வட்டம் ஆகியவற்றில் நன்கு அறிமுகமானவர்களான பேராசிரியர் மௌனகுரரு மற்றும் பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது
UTSC Welcomes Inaugural Chair in Tamil Studies
Following an intensive and meticulous selection process, we are overjoyed to announce the appointment of Sidharthan Maunaguru as the inaugural Chair of Tamil Studies at University of Toronto Scarborough (UTSC). The Tamil Chair will be housed in the Program in Global Asia Studies in the Department of Historical and Cultural Studies.
This appointment marks a special milestone for our institution. It represents the culmination of one of the most significant public fundraising efforts in UTSC’s storied history and underscores our commitment to Inclusive Excellence. We extend our heartfelt gratitude to the Canadian Tamil Congress and Tamil Chair Inc. for partnering with us and spearheading an expansive and dynamic grassroots campaign, which garnered the support of 3,800 donors from across the globe.
Prof. Maunaguru brings a unique blend of scholarly excellence and deep commitment to the Tamil diaspora. As an Associate Professor in Anthropology, jointly appointed with the Department of Sociology and Anthropology, and South Asian Studies Programme, and former Assistant Dean (Undergraduate Studies) at the Faculty of Arts and Social Sciences, National University of Singapore, he has led pivotal research initiatives. He was a Newton International Fellow (UK), and more recently a senior fellow at Collegium Helveticum, ETH (Switzerland). These focused on understanding the unique challenges faced by the South Asian Tamil diaspora. His work has received acclaim for its originality and significance. His in-depth and innovative research will surely enrich our academic community and chart the course for the growth of Tamil Studies at the University of Toronto and throughout Canada. Prof. Maunaguru will assume the role on 1 May, 2024.
Such milestones are achievable only with the support and trust of our donor community. To each and every contributor, our gratitude is profound. Your support has advanced not just Tamil studies, but also the broader cause of cultural understanding.
Thank you for helping realize this shared vision!