பல வருடங்களாக அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் அயலான் திரைப்படத்தின் புதிய பதிவேற்றத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் கடந்த சில வருடங்களாக தயாராகிவரும் படம் அயலான். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 2024 பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதன் முதல் பாடல், வேற லெவல் சகோ… கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. அயலானின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்றும், படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26 நடைபெறும் எனவும் படத்தை தயாரித்திருக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரஹ்மான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.