பு.கஜிந்தன்
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவாளர் சபையின் ஏற்பாட்டில், கூட்டுறவுப் பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கமண்டவத்தில் யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் உபதலைவர் க.மகாதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதுடன் கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய திருவுருவ படத்திற்கான மலர்மாலை அணிவித்த துடன் நினைவேந்தலினை செலுத்தியதுடன் நினைப்பேருரை யும் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து யாழ் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்த்துறை விரிபுரையாளர் க. கபிலன், யாழ்ப்பாண மாவட்ட கால்நடை கூட்டுறவு சங்க சமாச தலைவர் கரிஸ்ரர் ஸரீபன் ஆகியோர்களும் கலந்துகொண்டு நினைவுப் பேருரையும், நினைவேந்தலினையும் செலுத்தினர்கள்.
இதனை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களில் 440 கூட்டுறவுச்சங்கள் ஊடாக சிறப்பாக செயலாற்றிய 59 கூட்டுறவாளர்கள் இதன் போது கெளரவிக்கப்பட்டனர். மேலும் யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவாளர் சபையினால் நடாத்தப்பட்ட மனைப்பொருளியல் பயிற்சிநெறியினை பூர்த்தி 70 மகளிர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் பனை, தென்னை, சிக்கனகூட்டுறவு, தனியார் கூட்டுறவாளர்கள் சங்க, சமாசம்,ஸஉள்ளிட்ட தலைவர்கள், செயலாளர்கள் பயனாளிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.