உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு 3 1/2 வயது நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 23ஆம் திகதி குறித்த குழந்தையின் தந்தை உழவு இயந்திரத்தின் சுழலக் கூடிய கலப்பையை வீட்டில் வைத்து இயக்கிக் கொண்டு இருந்தவேளை குழந்தை தடி ஒன்றினை கலப்பையினுள் வைத்துள்ளது. இந்நிலையில் தடி கலப்பையினுள் இழுக்கப்பட்டவேளை குழந்தையும் சேர்ந்து இழுபட்டதனால் கலப்பையில் சிக்குண்டு படுகாயமடைந்தது.
இவ்வாறு படுகாயமடைந்த குழந்தை ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இறுதியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நேற்றையதினம் ஒப்படைக்கப்பட்டது.