பு.கஜிந்தன்
Download link
இன்றைய தினம் (06.12.2023) வைத்தியர் வாணி பிறேம்ஜித் ( USA ) மற்றும் வைத்தியர் மாலதி வரன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன், தொண்டு நிறுவனமாகிய வன்னி ஹோப் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 5 இலட்சம் பெறுமதியான ஸ்பைரோமீட்டர் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்கூறிய வைத்தியசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் , தீவக மக்களின் சுகாதார நலன் கருதியும்,தற்போதைய நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டும் வன்னி ஹோப் நிறுவன உத்தியோகத்தர்களால் ஸ்பைரோமீட்டர் கருவியானது உத்தியோக பூர்வமாக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.