வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா (வயது 17) என்ற மாணவியே தவறான முடிவெடுத்து 05-12-2023 தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் அன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் மினங்குப்பிட்டி இந்து மயானத்தில் நடைபெற்றது.
குறித்த மாணவியின் மரணம் ஒட்டுமொத்த ஊரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.