இதனை செயற்படுத்த தவறின் சர்வதேசத்தின் அழுத்தத்தினை இலங்கை எதிர்கொள்ளநேரிடும் என பா.உ த.சித்தார்த்தன் கோரிக்கை.
ஐ.நா மனித உரிமைகள் கழகத்தால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கா எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை! இதனை செயற்படுத்த தவறின் சர்வதேசத்தின் அழுத்தத்தினை இலங்கை எதிர்கொள்ளநேரிடும் என பா.உ த.சித்தார்த்தன் பாராளுமன்றில் தெரிவித்தார்………
தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஒரு சர்வதேச பிரச்சினையாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தால் எடுக்கப்பட்ட அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதைக் கவனிக்கவும் இல்லை. இப்படியாக சர்வதேசம் கூறுகின்ற விடயங்களையெல்லாம் நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டுதான் இந்த நாடு ஒரு மிகக் கஸ்டமான நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்யுங்கள் என்று சர்வதேசம் சொல்லியிருக்கின்றது.
இப்படியாக எங்களுடைய தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அதாவது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியஇ அவர்கள் தாங்களே தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக்கூடிய விதத்திலே ஒரு நியாயமான தீர்வைக் கொடுங்கள். இப்டியான நிலைமைகளை உருவாக்கினால்தான் சர்வதேச ரீதியிலே இந்த நாடு தலைநிமிர்ந்து நிற்கமுடியும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். அப்போதுதான் ஏனைய நாடுகளெல்லாம் இந்த நாட்டுக்கு உதவுவதற்கு முன்வருவார்கள். இதை மிகத் தெளிவாக உணர வேண்டும். இதை செய்ய வேண்டுமென்று கேட்டு முடிக்கின்றேன்.