பு.கஜிந்தன்
வரலாற்றுச் சிறப்புமிக்க கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் தேவஸ்தானத்தின் வருடாந்த கொடியேற்றம் 06.12 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன், மடசாமி மற்றும் கருப்பானசாமிக்கு விஷேட அபிஷேக, ஆராதனை கள், இடம்பெற்று கொடித்தம்பத்திற்கான பூஜைகள் இடம்பெற்றன.
பின்னர் வசந்த மண்டபத்தில் அருள்பாலித்த ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பனுக்கு தீபராதனைகள் இடம்பெற்று, அங்கிருந்து எழுந்தருளிய எம்பெருமான் புலி வாகனத்தில் வீற்று கொடிமரத்தினை வந்தடைந்ததும் 10 மணி சுப மூர்த்தத்தில் மேளதாள, வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்களால் வேதபாராயண ஓதப்பட்டு கொடித்தம்பத்தில் ஆலயபிரதம குரு குருமாமணி கி.ஹரிஹரசுதச் சிவாச்சாரியரினால் மஹோற்சவ கொடியேற்றி வைக்கப்பட்டது. பின்னர் ஐயப்ப சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதியூடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ் மஹோற்சவத்தில் எதிர்வரும் 14.12 அன்று இரதோற்சவம் இடம்பெற்று மறுநாள் தீர்த்த உற்சவம் நிறைவுற, மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழா நிறைவடையும்
இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த குருமார்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.