– நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா.
காசா நெருக்கடியில் பெரும்பாலான நாடுகள் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றன. அவர்களில் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள். இருப்பினும் இரு தரப்பு கொலைகளையும் கண்டிக்க வேண்டும். காஸா நெருக்கடிக்கு இரு நாடுகளின் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டும் இணைந்து வாழ வேண்டும் என்பதும் எங்களின் கருத்து’ என்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வியாழன் நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டவேளை மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கிலும் சமாதானத்தை அடைவதற்கான ஒற்றுமையின் அடையாளமாக பாலஸ்தீன அடையாளம் மற்றும் வரலாற்றின் சின்னமான கறுப்பு வெள்ளை சால்வையை அணிந்து கொண்டு கலந்து கொண்டார்.
‘நான் இந்த சால்வை அணிந்து வந்தபோது ஒரு எம்.பி என்னிடம் பாலஸ்தீனத்திற்கா அல்லது இஸ்ரேலுக்கா ஆதரவாவாக உள்ளீர்கள் என்று கேட்டார். நான் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவில்லை என்று சொன்னேன்இ ஆனால் உலக அமைதிக்கு அழைப்பு விடுக்கவே சால்வை அணிந்தேன்’ என்று பிரேமதாச நாடாளுமன்ற அமர்வில் கூறினார்.
எனினும் பிரேமதாசவின் சால்வையில் ரவூப் ஹக்கீம் மற்றும் டிலான் பெரேரா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிந்திருந்த கொடி போன்று இருக்கவில்லை.