முல்லைத்தீவு வலயத்தில் உள்ள விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த ஆண்டு 10ம் மாதமளவில் இடம்பெற்ற மணிவிழா முறைகேடுகள் தொடர்பாக பழைய மாணவர் சங்கம் உட்பட பலரும் முறைப்பாடுகள் செய்த நிலையிலும் இன்றுவரை மாகாண, வலய கல்வி பணிப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேற்கொண்டு எழுதப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட படிவத்திற்கு குதர்க்கமான பதில் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.
இப்பதிலில் குறித்த பாடசாலை அதிபர் தாம் அனுமதிக்கள் எதுவும் பெறவில்லை எனவும், காசோலை ஊடாக கொடுப்பனவுகள் இடம்பெறவில்லை எனவும், பெறுவனவுகளுக்கு பற்று சீட்டுகள் எதுவும் வழங்கவில்லை எனவும், இந்நிகழ்விற்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கல்வி அமைச்சின் சுற்று நிருபங்களுக்கு புறம்பாக இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மாகாண கணக்காய்வு வாய்மொழி மூலமாக தவறில்லை எனவும், எழுத்து மூலமாக ஆதாரங்கள் எதுவும் இல்லை என அதிபர் குறிப்பிட்டுள்ளது அடி முதல் நுனி வரை வடக்கு மாகாண கல்வித்துறையில் ஊழல் நிரம்பியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இவ்வாறு சாத்திரம் கூறி ஊழலை மறைப்பவர்கள் அதிகாரிகளாக இருக்கும் வரை வடக்கு கல்வி அழிவதை யாராலும் தடுக்க இயலாது.