உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் பங்குபற்றலுடன் நேற்று சனிக்கிழமை மாலை உடுப்பிட்டி விநாயகர் சனசமூக நிலையத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
“கரவெட்டி பிரதேச செயலாளர் நேரடியாகவும் வாய் மொழி மூலமாகவும் மாவட்ட ஒருக்கிணைப்பு குழு தலைவர் தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்திற்கான சிபார்சினை வழங்கியதாக குறிப்பிட்டதற்கு இணங்க சமூகமட்ட அமைப்புக்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.