நேற்று சனிக்கிழமை 9ம திகதி ஸ்காபுறோவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பெற்ற Senthil Financial Services வரி மற்றும் நிதி ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் ஆரம்ப விழாவில் அழைக்கப்பெற்ற பல முக்கிய பிரமுகர்கள். வர்த்தகப் பிரமுகர்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்து நிறுவனத்தின் ஸ்தாபகரும் பல துறை விற்பன்னருமான திரு .ஆறுமுகம் செந்தில்வடிவேல் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் வாழ்த்திச் சென்றனர்.
அங்கு அழைக்கப்பெற்ற நண்பர்கள் மற்றும் ஊடகத்துறை பிரமுகர்கள் என சிலர் வாழ்த்துரைகளை வழங்கினார்கள். அங்கு அழைக்கப்பெற்றிருந்த ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் நாடாவை வெட்டி நிறுவனத்தை திறந்து வைத்த பின்னர் நிறுவனத்தின் தலைவர் கனடாவின் மத்திய மற்றும் மாகாண நிதி அமைச்சுகளில் பணியாற்றி பலரின் நன்மதிப்பையும் பாராட்டுக்களைப் பெற்ற திரு ஆறுமுகம் செந்தில்வடிவேல் அவர்களுக்கு ஒன்றாரியோ மாகாண அரசின் சார்பிலான பாராட்டுப் பத்திரத்தை வழங்கினார். இங்கு காணப்படும் படங்கள் காட்சிப்படுத்துகின்றன. ( திரு செந்தில்வடிவேல் அவர்களை வாழ்த்த விரும்புவோர் 416 616 6031 என்னும் இலக்கத்தை அழைக்கவும்)
சத்தியன்- கனடா உதயன் செய்திப் பிரிவு