இந்தியாவில் இந்துக்களை இலவசமாக அயோத்திக்கு அழைத்துச் செல்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
சென்னையில் இருந்து 22.1.2024 முதலாக அறுபது நாள்களுக்கு எவரும் அயோத்திக்கு வழிபட இலவயமாகச் சென்று மீளலாம்.
இலங்கையின் 25 மாவட்டங்களில் வாழ்கின்ற இந்துக்களுக்கும் அதே இலவய சேவையை வழங்குங்கள்.
காங்கேயன்துறையில் இருந்து கப்பல். நாகப்பட்டினத்தில் இருந்து தொடர்வண்டி.
நேரே அயோத்தி. பாபர் மசூதியை இடித்துக் கட்டிய இராமர் திருக்கோயிலில் வழிபாடு.
அங்கிருந்து தொடர்வண்டியில் கங்கை யமுனை சரசுவதி ஆறுகள் சங்கமிக்கும் பிரயாகை.
அங்கிருந்து தொடர்வண்டியில்காசி.
காசியிலிருந்து தொடர்வண்டியில் நாகப்பட்டினம்.
கப்பலில் காங்கேயன்துறை.
பயணத்திற்கு 6 நாள்கள் வழிபாட்டிற்கு 6 நாள்கள்
எனப் 12 நாள்கள் பயணம்.
இந்திய அரசு இந்திய இந்துக்களுக்கு வழங்குவது போல் இலங்கை இந்துக்களுக்கும் வழங்குமாறு சிவ சேனை கேட்டுக்கொள்ளும் இந்தியப் பிரதமருக்கான கடிதம் இணைப்பில்.