பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து 12-12-2023 அன்று கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றியதுடன் டெங்கு பெருகக்கூடிய இடங்களும் இல்லாதொழிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு காலை 8:00 மணியிலிருந்து 11மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக வல்வெட்டித்துறை கடற்கரையோர பிரதேசங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய பிளாஸ்டிக் கொள்கலன்கள் என்பன சிரமதானப் பணியின் மூலம் அகற்றப்பட்டதுடன் டெங்கு பெருகும் இடங்களும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.
இதில் பருத்தித்துறை இலங்கை செஞ்சிலுவைச் தலைவர், செயலாளர், நிர்வாகிகள், தொண்டர்கள், பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர்கள், பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், ஊரிக்காடு இராணுவத்தினர், வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி, மற்றும் வல்வை சிவகுரு வித்தியாலய ஆசியர்கள், மாணவ மாணவிகள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.