(யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர்கள்)
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள, தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்கள் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வங்குவதற்காக தற்போது தனது குடும்பத்துடன் கனடாவில் வாழும் முன்னாள் பிரபல நடிகை ரம்பா அவர்கள் இலங்கைக்கு சென்றுள்ளார் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்
இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த ரம்பா அவர்கள் புதன்கிழமை 13ம் திகதி யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திற்கு தரிசனத்திற்காகச் சென்றுள்ளார். மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தின் விசேட கிரகப்பிரவேசம் நிகழ்வில் பங்கெடுப்பதற்கே அன்றையதினம் இவ்வாறு ஆலயத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவர் ஆகியோர் சென்றிருந்தனர்.
நடிகை ரம்பா அவர்கள் யாழ்ப்பாணம் – சுதுமலையை பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது கனடா வாழ் தொழிலதிபர் ஒருவரையே திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.