அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழாவானது இன்றையதினம் சங்கானை சிவப்பிரகாச வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அவர்கள் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் தேசியக் கொடி, பாடசாலை கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டு, மங்கல விளக்கேற்றப்பட்டு, தேவாரத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.
பின்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நூலின் அறிமுக உரையை பொறுப்பாசிரியர் திரு.செ.பிரதாப் அவர்களும், ஏற்புரையை மாணவியும், நூலின் ஆய்வுரை யினை ஊடகவியலாளர் கு.டிலீப் அமுதன் அவர்களும் ஆற்றினர். அதன் பின்னர் நூல் வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது. அத்துடன் பாடசாலை அதிபர் அவர்களால் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அரசறிவியல் மன்ற தலைவி செல்வி. பா.அகல்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் திரு.ரகுராம், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் சமூக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் லதிக்கிறேஸ் விக்ரர் ஜெயக்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.