(கனகராசா சரவணன்)
மட்டு மேச்சல் தரை மயிலத்தமடு பிரதேசத்திற்கு நாங்கள் செல்வதை தடுப்பதற்காக இனவாதத்தை தூண்டிவிட்டு அந்த இனவாதத்தின் ஊடாக முழுக்கமுழுக்க தமிழர்களுடைய உரிமையை நசுக்கும் செயற்பாட்டிற்காக அம்பிட்டிய சுமணரட்ன தேரரை பொலிசார் வரவழைத்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
குறித்த மேச்சல் தரைபகுதிக்கு பண்ணையாளர் சகிதம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட குழுவினரை இன்று வெள்ளிக் கிழமை (15) மயிலத்தமடு பொலிஸ் காவலரனில் வைத்து தடுத்து நிறுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஊடாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மயிலத்தமடு பகுதிக்கு செல்ல இருப்பதாக அறிவித்திருந்தோம் அதற்கு உரிய ஒத்துழைப்பை பொலிசார் வழங்கவேண்டும் என கேட்டார் அப்போது அவர் ஜனாதிபதியின் செயலாளரின் அனுமதி இல்லாமல் அங்கு செல்ல அனுமதி இல்லைஎன அவர் தெரிவித்தார்.
அப்போது இனாதிபதியின் செயலாளரிடம் நான் மயிலத்தமடு பகுதிக்கு செல்ல இருப்பதாகவும் பொலிசாருக்கு அனுமதி வழங்குமாறு கேட்டேன் அப்போது அவர் நீங்கள் நாட்டில் எந்தவொரு பகுதிக்கு செல்ல உரிமை இருக்கு அதற்கு எவரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை அங்கு செல்வதற்கு அனுமதி பெறவேண்டும் என கட்டளை இடவில்லை எனவே அனுமதி தேவை இல்லை. அங்கு தாராளமாக போக முடியம் என்றார்.
நீங்கள் சொன்னாலும் பொலிஸ் அங்கு தடுக்கின்றனர் ஆகவே உரிய முறையில் அங்குள்ளவர்களுக்கு கட்டளையை வழங்குமாறு தெரிவித்தபோது அவர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் உதவி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஊடாக ஒத்துழைப்பை வழங்குமாறு அவர்களிடம் சொல்வதாக அவர் தெரிவித்தார்.
அதன் பின்னணியில் இன்று காலை 10 மணியளவில் நாங்கள் மயிலத்தமடு பகுதிக்கு இரு வாகனங்களில் 10க்கு மேற்பட்டோர் சென்ற நிலையில் அங்கு காவல் அரண்பகுதியில் வீதியில் குறுக்கே நூறுக்கு மேற்பட்ட பொலிசார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பொலிசார் எங்களை மறித்தனர்.
அப்போது கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எழுத்து மூலமாக ஜனாதிபதி செயலாளர்; அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்ததையடுத்து நான் உடன் ஜனாதிபதி செயலாளருடன் பேசினேன் அவர் தெளிவாக தெரிவித்தார் எனக்கு அப்படி ஒரு கட்டளையிடப்பட்டதாக எந்தவிதமான ஆதாரமும் கிடையது எப்போது அந்த தீர்மானம் எடுத்தாக பொலிசாரிடம் கேட்குமாறு கேட்டார்
அதற்கு நான் கடந்த ஓக்டோபர் 15ம் திகதி தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஓ.ஜ.சி. தெரிவித்துள்ளார் என்றபோது அவர் இது தொடர்பாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலானிடம் இது தொடர்பாக ஆராய்ந்து தொடர்பு கொள்வதா தொலைபேசியை நிறுத்திவிட்டார்.
இவ்வாறான நிலையில் நாங்கள் இருந்து கொண்டபோது அங்கு அம்பிட்டிய சுமணரட்ண தேரர் சில காடையர்களுடன் அங்குவந்து தூசன வார்த்தைகள் பேசி இனவாதத்தை கக்கிகொண்டு நாங்கள் யாழில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்து அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
நாங்கள் இன்று மயிலத்தமடுவிற்கு காலை 10 மணிக்கு போவது பொலிசாருக்கு மாத்திரம் தான் தெரியும் வேறு எவருக்கும் தெரியாது பொலிஸ் அறிவித்துதான் தேரர் கடையர்களுடன் திட்டமிட்டு வந்து மேல்மட்டத்தில் இருந்து ஜனாதிபதி செயலகம் அனுமதி வழங்கினாலும் ஒரு இனக்கலவரம் நடக்கும் என்பற்காக கூட இந்த நேரத்தில் விடமுடியாது என சுட்டிக்காட்டி தடுப்பதற்கு திட்டமிட்டு சதி மேற்கொள்ளப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல சாதாரன ஒரு இடத்திற்கு போவதை தடுப்பாதக இருந்தால் இரண்டுவழிதான் இருக்கின்றது ஒன்று அரசாங்கம் ஒரு முடிவெடுத்து பாதை மூடுவதற்கு வர்த்தமானியை வெளியிட்டு அதை தடைசெய்ய வேண்டும் அல்லது நீதிமன்றம் அந்த போவதற்குரிய பயணத்தடையை வழங்கி இருக்கவேண்டும். இந்த இரு வழிகளை தவிர வேறு எந்த கோணத்திலும் வந்து எங்களுடைய பயணத்தடையை தடுப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் மேலதிகமான ஆலோசனைகளை பெற்று இதனை எவ்வாறு கையாள்வதுபற்றி முடிவு எடுப்போம்
பண்ணையாளர்களை பொறுத்தமட்டில் இன்று நடந்த சம்பவத்தையும் இதுவரைக்கும் 90 நாளுக்கு மேல் போராடிவருகின்ற இவர்களது நிலமைகள் ஒவ்வோருநாளும் மோசமாகிவருகின்றது சொத்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுன்றது அவர்களின் மேச்சல்தரையை கண்முன்னால் அழித்து வேறுவேறு நபர்களுக்கு வழங்கிவருகின்றனர் இதனை நாடாளுமன்றத்தில் தேசிய பிரச்சனை தொடர்பாக கட்சி தலைவர் கொண்டுவரமுடியும் என்ற ரீதியில் அதனை நாடாளுமன்றம் கொண்டுவந்து சர்வதேச ரீதியில் வெளிப்படுத்துவோம் என்றார்.