ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பொன்னா வெளியில் சுண்ணக்கல் அகழ்வதற்கு எதிர்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில் அகழ்வு நிறுத்தப்பட்டது.
பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொன்னாவெளிப் பகுதியில் பல ஏக்கர் காணியை சுன்னக்கல் அகழ்விற்காக ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிறுவனம் சுன்னக்கல் அகழ்வதற்காக பாரிய இயந்திரங்களுடன் உதவியுடன் குறித்த பகுதிக்கு வந்ததால் வேரவில் பொன்னாவெளியை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பூநகரி பிரதேச சபை செயலாளர் மற்றும் கனிய வளத் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர் .
அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த நிறுவனம் புதிய அனுமதிகளை முழுமையாக பெறாதமை கண்டறியப்பட்ட நிலையில் சுண்ணக் கல் அகழ்வுக்காக வருகை தந்த இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டது.