((கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மேச்சல் தரை பகுதியான மயிலத்தமடு பிரதேசத்துக்கு பண்ணையாளர் சகிதம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட குழுவினரை இன்று வெள்ளிக் கிழமை (15) மயிலத்தமடு பொலிஸ் காவலரனில் வைத்து பொலிசார் ஜனாதிபதி செயலகத்தின் அனுமதி இன்றி உட் செல்ல அனுமதிக்க முடியாது என தடுத்தி நிறுத்திய நிலையில் அங்கு சென்ற அம்பிட்டய சுமனரட்ண தேர் காடையர்களுடன் சென்று வம்பு இழுத்து கலகம் ஏற்படுத்த முயற்சித்த நிலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது
குறித்த மேச்சல் தரைப்பகுதியில் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகள் தினம் தினம் சட்டவிரோதமாக குடியேறிய பயிர் செய்கை செய்துவரும் சிங்களவர்களால் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டும் வாய் வெடிவைத்தும் வாளால் வெட்டியும் கொன்றுவருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு சென்று நிலமையை பார்வையிடுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணிகட்சி தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட்ட கட்சி ஆதரவாளர்கள் பண்ணையாளர் சகிதம் பொலிசாருக்கு அறிவித்துவிட்டு இரு வாகனங்களில் சம்பவதினமான இன்று மேச்சல் தரை பகுதிக்கு சென்றனர்.
அப்போது மயிலத்தமடு பொலிஸ் காவல் அரண்பகுதியில் வீதியின் குறுக்கே வீதி தடைகளை போட்டு பொலிசாhர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு சென்ற கN{ந்திரகுமார் குழுவின் வாகனங்களை பொலிசார் மறித்து இனாதிபதி செயலாளரின் எழுத்து மூல கடிதம் இல்லாமல் உட் செல்ல அனுமதிகிடைக்காது என தெரிவித்த நிலையில் ஜனாதிபதி செயலாளருடன் கஜேந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அம்பிட்டிய சுமணரட்ன தோர் வாகனம் ஒன்றில் சிலருடன் வந்து சுதனவார்த்தைகள் பேசி யாழ்பாணத்தில் இருந்து இங்கு என்ன அலுவல் பிள்ளையான் வியாழேந்திரன் இரு;கின்றனர் அவர்கள் நல்லவர்கள் கஜேந்திரன், சுமத்திரன்,சாணக்கியன் இனவாம் பேசிவருவதாக சத்தமிட்டு ஏசியவாறு அடாவடியில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அவர் தொடர்ந்து வாகனத்தில் இருந்த கஜேந்திரகுமாரை தம்பி வெளியேவா என வம்புக்கு இழுத்து வசைபாடினார் தேரரின்; அடாவடியை பொலிசார் தடுத்து நிறுத்தாது அசமந்த போக்கில் இருந்ததுடன் கஜேந்திரகுமாரும் தேரரின் அடாவடிக்கு கனவம் செலுத்தாது சுமார் ஒருமணி நேரம் கொட்டும் மழையில் நின்று கொண்டு ஜனாதிபதி செயலாளருடன் உரையாடிய பின்னர் அனுமதி இதுவரை கிடைக்காதலால் திரும்பி போவதூக தெரிவித்து திரும்பினர்