இன்று வியாழக்கிழமை 14ம் திகதி மாலை கனடாவில் மார்க்கம் நகரில் இயங்கிவரும் Greensbrough Seniors Wellness Club தமிழ் பேசும் மூத்தோர் அமைப்பு நடத்திய நத்தார் தினக் கொண்டாட்டம். சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைப்பின் தலைவர் திருமதி செல்வா அருள்ரரஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மேற்படி அமைப்பு கடந்த 03-12-2023 அன்று நடத்திய வருடாந்த இராப்போசன விருந்தும் சந்திப்பு நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்கள் ஆகியோருக்கு இன்று சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன. அவற்றை தலைவி செல்வா அருள் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட சிலர் வழங்கினார்கள். டாக்டர் போல் ஜோசப் ம ற்றும் திருமதி இந்திராணி நாகேந்திரம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம். ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோருக்கு அவர்கள் ஆற்றிவரும் ஊடகச் சேவைகள் தொடர்பான பாராட்டுக் கேடயங்கள் வழங்கப்பெற்றன.
அங்கத்தவர்கள் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பெற்றன. அத்துடன் நத்தார் கீதமும் இசைக்கப்பெற்றது.