கனடாவில் சிறப்பாக இயங்கிவரும் நிபுணத்துவம் பெற்ற இலங்கை கணக்காளர்கள் சங்கம் அதன் 21வது ஆண்டு விழாவை அண்மையில் கொண்டாடியது.
டிசம்பர் 02 ஆம் தேதி ஸ்கார்பரோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இடம் பெற்ற உரைகள். நடனங்கள். இசை நிகழ்ச்சிகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆகியன சிறப்பாக இருந்தன. கணக்காளர்களின் சாதனைகள், மற்றும் சிறந்த அங்கத்தவர்களை கௌரவித்தல் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்துதல் போன்றவற்றிலும் விழா ஏற்பாட்டாளர்கள் முக்கிய கவனம் எடுத்திருந்தனர்.
மேற்படி 21வது ஆண்டு விழாவில் 400க்கும் மேற்பட்ட அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் கலந்து கொண்டனர் நடனம், இசை மற்றும் பல்வேறு வகையான பொழுதுபோக்குகளுடன் கூடிய நிகழ்வு
அனைவரும் சேர்ந்து அற்புதமான மாலை நேரத்தை இனிமையாக கழித்து அனுபவிக்க இந்த நிகழ்வு உதவியது என்றால் அது மிகையாகாது
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்